Thursday, November 19, 2009

Ellame Unnal, Ellamey Unnaal Tamil Movie | Anything For You | A4U Movie!

[Ellame-Unnal-Ellamey-Unnaal-Tamil-Movie-Stills.jpg]
ஹாலிவுட் நட்சத்திரங்களின் எல்லாமே உன்னால்

லாஸ்வேகாஸ் திரைப்பட விழாவில் சில்வர் ஏஸ் அவார்ட் 2009 என்ற விருதை வென்ற படம், எனிதிங் பார் யு. இந்தப் படத்தை எல்லாமே உன்னால் என்ற பெய‌ரில் தமிழில் வெளியிடுகிறார்கள்.

ஹாலிவுட்டில் தயாராகும் படங்கள் தமிழில் டப் செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. பிறகு ஏன் இந்தப் படத்துக்கு ஸ்பெஷல் கவரே‌ஜ்?

காரணம் இருக்கிறது. எனிதிங் பார் யு (Anything For You)படத்தை தயா‌ரித்து இயக்கியவர் ஒரு தமிழர். பெயர் ஆனந்த் அழகப்பன். தமிழரான இவர் இயக்கிய ஹாலிவுட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்த சாம்கோஷும் ஒரு தமிழர்தானாம். ஹீரோயின்? யுஎஸ்-ஸில் மிஸ் இந்தியா யுஎஸ் பட்டம் வென்ற பூஜாகுமார். இன்னொருவர் ஜூலியா பைன்.

அமெ‌ரிக்காவில் வசிக்கும் இளம் இந்திய தம்பதியின் வாழ்க்கையில் ஒரு அமெ‌ரிக்க பெண் நுழைகிறாள். அது ஏன் என்பதுதான் கதை. படத்தை இயக்கியிருக்கும் ஆனந்த் அழகப்பன் விஜய் டிவி-யில் சில தொடர்கள் இயக்கிய அனுபவம் உள்ளவர். அவரது முதல் திரைப்பட முயற்சி இது.

பார்க்கிற மாதி‌ரி இருந்தால் நாலு பேர் கேட்கிற மாதி‌ரி பாராட்ட நா‌ங்க தயார் அழகப்பன்.

No comments:

Post a Comment

Followers