Monday, November 16, 2009

Kalaignar To Inaugurate FICCI Media Conclave!!


சென்னையில் ஊடக திரைப்பட வர்த்தக மாநாடு : கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னையில் வருகிற 18 முதல் 20ம்தேதி வரை மூன்று நாள்களுக்கு ஊடகத் திரைப்பட வர்த்தக மாநாடு நடைபெறுகிறது. டில்லியை தலைமையகமாகக் கொண்டு, அனைத்து இந்திய தொழில் வர்த்தக ஊடகம் மற்றும் கேளிக்கை தொழில் வர்த்தக கூட்டமைப்பு மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இப்போது சென்னையிலும் செயல்பட உள்ளது. இந்த அமைப்புக்கு நடிகர் கமல்ஹாசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னையில் ஊடக திரைப்பட வர்த்தக மாநாடு நடைபெறவிருக்கிறது. இதுகுறி்த்து நடிகர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தொழில் வர்த்தக ஊடகம் மற்றும் கேளிக்கை தொழில் வர்த்தக கூட்டமைப்பு, சென்னையிலும் தொடங்கப்பட வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாகப் போராடி வந்தேன். இப்போது அதற்கு பலன் கிடைத்துள்ளது. இந்த அமைப்பின் சார்பில் நலிந்த திரைப்படங்களுக்கு நிதியுதவி அளிப்பது, பன்னாட்டு சினிமா நிறுவனங்களுடன் இணைந்து மாநாடுகள் நடத்தி நவீன யுக்திகளைத் தமிழ்த் திரையுலகில் புகுத்துவது, சர்வதேச சினிமா நிறுவனங்களின் ஆய்வுகளை எடுத்துக் கூறி தமிழ்த் திரையுலகை மேம்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்களை செயல்படுத்தலாம்.

இந்த திரைப்பட வர்த்தக மாநாடு சென்னையில் நவம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சிறந்த நடிப்புப் பயிற்சி கல்லூரி இல்லை. இந்த அமைப்பின் மூலம் சிறந்த நடிப்புப் பயிற்சி கல்லூரியை தொடங்கும் திட்டம் உள்ளது. இந்த அமைப்புக்காக தமிழக முதல்வர் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். இந்த அமைப்பின் மூலம் சினிமா வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகளிடம் முன் வைப்போம். இந்தியாவின் பல்வேறுபட்ட மாநிலங்களின் கேளிக்கை வர்த்தகத் தொழிலை இந்த அமைப்பின் மூலம் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Dr Kamal Haasan, Chairman, FICCI Media and Entertainment Business Conclave made a grand announcement at a media interaction today. “Its really a great honour to be guiding FICCI’s first ever initiative dedicated to the Southern entertainment industry. Our effort would be to identify and seek redressal of the issues facing the industry across states.”

The conclave will be inaugurated by the CM of TN, Kalaignar Karunanidhi and Ambika Soni, Honorable Union Minister of Information and Broadcasting, Government of India will deliver the keynote address.

The conclave will be held on the 18th and 19th of November and will be attended by the likes of Karan Johar, Yash Chopra,Mohanlal, Mammooty, Siddharth Basu and several others. Sarath Kumar, Radhika, Shruti Haasan, Soundarya Rajnikanth, Kiran Reddy and others are also expected to take part.

The areas addressed will be performing arts, overseas markets, film financing, current trends in TV content, Animation digital formats and the growth of radio and TV. Delegates from India and abroad are expected to participate in the seminars and discussions which will no doubt give a boost and exposure to our entertainment industry.

No comments:

Post a Comment

Followers