Monday, November 16, 2009

Kamal - Rajini Acting together in 3 Movies In A Year!!!!

[kamal_rajini.jpg]
நானும் ரஜினியும் வருஷத்துக்கு 3 படத்தில் நடிக்கப்போகிறோம்! - கமல் தந்த இன்ப அதிர்ச்சி

ஒருபக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபக்கம் தமிழ்சினிமாவை முன்னேற்ற தேவையான தளங்களை அமைத்தல் என்று தனது பொறுப்பை மேலும் கூட்டிக் கொண்டிருக்கிறார் கமல். ஐஐடி இன்ஸ்டியூட்டுடன் இணைந்து அவர் நடத்திய ஸ்கீரின் ரைட்டிங் பயிற்சி வெகு முக்கியமானதாக கருதப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது சினிமா வர்த்தக கருத்தக கருத்தரங்க மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் கமல்.

சென்னையில் வரும் 18, 19 ந் தேதிகளில் சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் கருணாநிதி துவங்கி வைக்கிறார். இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு வட இந்தியாவில்தான் இதுவரை மாநாடுகளை நடத்தி உள்ளது. இந்த மாநாடு சென்னையிலும் நடைபெற வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார் கமல். மாநாட்டு பொறுப்பை கமலிடடே கொடுத்துவிட்டார்களாம். முதல்வரிடமும் இந்த மாநாடு குறித்து விவரித்தார் கமல். முதல் உற்சாகம் அவரிடமிருந்தே தொடங்கிவிட்டது. அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த கலைஞர், கருத்தரங்கத்தை துவங்கி வைக்கவும் சம்மதித்திருக்கிறார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த கமலிடம், மாநாட்டில் ரசிகர்களுக்கு அழைப்பு உண்டா? என்ற கேள்வி எழுப்ப பட்டது. “நாங்கள்ளாம் உட்கார்ந்து கேக் செய்வது எப்படின்னு பேசுவோம். அது சரியாக இருந்து சுவையாகவும் தயாரான பிறகுதான் அவர்களுக்கு டேஸ்ட் பண்ண கொடுக்க முடியும். இந்த மாநாட்டிற்கு அவர்களுக்கு அழைப்பில்லை” என்று ‘ருசியாக’ பதிலளித்தார் கமல். “தமிழ்நாட்லே நிறைய நடிகர்களுக்கு நடிக்கவே தெரியவில்லை. அவங்களுக்கு நடிப்பு சொல்லித்தரலாமே?” என்ற இன்னொரு கேள்விக்கு கமல் உட்பட எல்லாருமே விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதற்கும் சீரியஸ் ஆகவே பதில் சொன்னார் கமல்.

“எனக்கெல்லாம் ஒரு பாலசந்தர் சார், ஒரு சண்முகம் அண்ணாச்சி இருந்தாங்க. அவங்க சொல்லிக் கொடுத்ததை கொஞ்சம் கொஞ்சமாக கத்துகிட்டு காலத்தை நகர்த்தினோம். இன்னும் நான் கற்றுக்கொண்டுதான் இருக்கேன்” என்ற கமல், நிருபரின் கேள்விக்கு சற்று மழுப்பலாகவே பதில் சொல்லி முடித்தார்.

கமல் சொன்ன இன்னொரு பதில்தான் ரசிகர்களுக்கு திருவிழா.

“நானும் ரஜினியும் வருஷத்துக்கு மூணு அல்லது நாலு படங்களில் நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கோம்...”

No comments:

Post a Comment

Followers