Monday, November 16, 2009

TN Chief Minister Karunanidhi Watches Peranmai!!!!!!!

[Peranmai+movie+poster+wallpaper.jpg]
முதல்வர் பார்த்த பேராண்மை

எவ்வளவுதான் வேலைப் பளு இருந்தாலும் கலையுலகத்திற்காக நேரம் ஒதுக்குவது முதல்வர் கலைஞரின் வழக்கம். சில தினங்களுக்கு முன் சென்னை போர் பிரேம்ஸ் திரையரங்கத்திற்கு வந்த கலைஞர், பேராண்மை படத்தை ரசித்துப் பார்த்தார். அதற்கும் சில நாட்களுக்கு முன்புதான் பழஸிராஜா படத்தைப் பார்த்து சரத்குமாரைப் பாராட்டிவிட்டு சென்றார். இப்படி முதல்வரின் தொடர் விசிட்டால் எப்போதும் அலர்ட்டாக இருக்கிறது போர் பிரேம்ஸ் திரையரங்கம்.

தனது வீல் சேரோடு முதல்வர் லிப்டில் ஏறுவதற்கு ஏற்ப வசதி செய்து வைத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஒருநாள் லிப்ட்டை இயக்கும்போது லிப்ட் தளத்திற்கு மேலே ஒரு இஞ்ச் உயரத்தில் நின்றுவிட்டது. பதறிப்போன தியேட்டர் நிர்வாகி கல்யாணம், லிப்ட் என்ஜினியர்களை அழைத்து அதை உடனடியாகச் சரி செய்தார். சீட்டில் முதல்வர் காலை நீட்டி அமர்வதற்கு வசதியாக அவரது சீட்டிற்கு முன்புற சீட்டையும் அகற்றியுள்ளது நிர்வாகம்.

சரி, பேராண்மை பார்த்துவிட்டு என்ன சொன்னாராம் முதல்வர்? டைரக்டர் ஜனநாதனிடம் இட ஒதுக்கீடு குறித்து சில காமெண்ட்டுகளை உதிர்த்துவிட்டுச் சென்றாராம்.

No comments:

Post a Comment

Followers